ஜெயலலிதா குற்றவாளி!
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வழங்கப்பட்டது. அதில், ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விபரம் 03.00 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். அத்தோடு, ஜெயலலிதா ஜெயராம் உடனடியாக நீதிமன்றக் காவலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரின் வாகனத்திலிருந்து தேசியக் கொடியும் அகற்றப்பட்டுள்ளது.
