Pages

Head Lines

Wednesday, November 9, 2016

புதியதாக வெளிவரவிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளில் நானோ ஜிபிஎஸ்-சிப், ஆர்.பி.ஐ. வதந்திகளை நிராகரித்தது



புதியதாக வெளிவரவிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளில் நானோ ஜிபிஎஸ்-சிப், ஆர்.பி.ஐ. வதந்திகளை நிராகரித்தது

புதுடெல்லி,

புதியதாக வெளிவரவிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளில் நானோ ஜிபிஎஸ் - சிப் உள்ளடங்கியிருக்கும் என்று வெளியாகிய தகவல்களை ரிசர்வ் வங்கி நிராகரித்தது.
 
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மாற்றாக மத்திய அரசு புதிய 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் புதியதாக வெளிவரவிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளில் நானோ ஜிபிஎஸ் - சிப் உள்ளடங்கியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியது.

இதனால் குறித்த ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் மற்றும் பதுக்கல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும். மட்டுமின்றி இந்த நானோ GPS சிப் பொருத்தப்பட்டுள்ளதால் செயற்கைக்கோள்கள் வாயிலாக கண்காணிக்க முடியும் எனவும், கறுப்பு பண நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகியது. மேலும், இவை அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வெளியான கருத்துக்கள் எனவும் குறித்த நானோ GPS சிப் ஒன்றை தயாரிக்கவே அதிகமாக செலவாகும் எனவும் கூறப்பட்டது. இதனால் இதுபோன்ற ஒரு திட்டத்தை அரசு முன்னெடுக்குமா என்பது சந்தேகமே எனவும் ஆய்வாளர்கள் கூறினர்.

ரிசர்வ் வங்கி நிராகரிப்பு

இந்நிலையில், புதியதாக வெளிவரவிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளில் நானோ ஜிபிஎஸ் - சிப் உள்ளடங்கியிருக்கும் என்று வெளியாகிய தகவல்களை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. சட்டவிரோத பண பரிவர்த்தனையை கண்காணிக்க மத்திய அரசுக்கு உதவும் வகையில் புதியதாக வரவிருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் நானோ ஜிபிஎஸ்- சிப்பை கொண்டிருக்கும் என்று வெளியானவை ”கற்பனைக்கதை” என்று ஆர்.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதுதொடர்பாக ஆர்.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் அப்லானா கில்லாவாலா பேசுகையில், இத்தகையை ஒரு தொழில்நுட்பமானது, இந்நேரத்தில் உலகில் கிடையாது, பின்னர் எப்படி நாங்கள் இதுபோன்ற ஒரு காரணியை உட்படுத்த முடியும்? என்று கேள்வி எழுப்பிஉள்ளார். 

ஆர்.பி.ஐ. இணையதளத்தில் புதிய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் அதுதவிர்த்து வேறு எதுவும் கிடையாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

No comments: